Ways to join
Pattikkaadu
$1.99/month
- Ad-free listening
For members only
127 episodes
- ”தமிழர்-கன்னடர் நல்லுறவு-மொழியால் நிகழட்டும்!”- பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் முத்துமணி நன்னன் நேர்காணல்பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன் அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர். தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர். எனது நெருங்கிய நண்பர். அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது. அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…
- நாத்திகர் மாநாட்டில் ஒரு ‘மதங்களற்ற’ தோழன்!கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 12 ஆம் தேதி (அக்.12, 2024) லிட்மஸ் 2024 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் பார்வை, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தும் எஸென்ஸ் என்ற அமைப்பு இதனை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சங்கர் என்ற அருமையான தோழரைச் சந்தித்தேன். ‘மதங்களற்ற மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை எர்ணாகுளத்தில் நடத்திவரும் நல்லவர் சங்கர். மனித நேயம்தான் வாழ்க்கையின் பொருளே என்று கூறும் அவருடன் ஒர
- கேரள சினிமா: கடவுளின் தேசத்தில் சாத்தானின் கரங்களா?மலையாளத்திரை உலகில் பெண்கள் பாலியல் ரீதியிலாகவும் உழைப்பின் அடிப்படையிலும் கடுமையாகச் சுரண்டப்படுவதாக நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. முற்போக்குப் பார்வையும் கல்வியறிவும் சமூக நல்லிணக்க மனோபாவமும் கொண்ட கடவுளின் சொந்த தேசம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? என்ன செய்யப்போகிறது?
- இலக்கியமும் கூட்டங்களும்இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வதே ஒரு சுகானுபவம். செண்டிமெண்ட், ஆக்ரோஷம், கதாநாயகர் வருகை, ரசிகர்களின் விசில், வெட்டு குத்து சண்டைகள், குரோதம், கோடை வாசஸ்தல பின்னணியில் பாடல்கள், ஆடல்கள் என்று எல்லாம் கலந்த கலவை சாதம் அது. (pix courtesy: pixabay)
- நூல் பரிந்துரை: ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்முடி திருத்தும் அழகு நிலையம் பேசும் கவிதைகள் இவை…
- பகத் பாசிலுக்கு ‘கொடிய’ நோயா?ஏ.டி.எச்.டி என்பது உண்மையில் ஒரு நோயா? எதற்காக இந்தப் புரளி?
- பி.இ படிக்கப் போறீங்களா?பொறியியலில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. (pic courtesy: Pixabay)
- +1 ல் எந்த குரூப் சூப்பர்?பத்தாம் வகுப்புக்கு பின்னர் இதுதானே முக்கிய கேள்வி…
- பொறியியல் படிப்பைத் தெரிவு செய்யும் முன்…பிடியுங்கள் ஆலோசனைகளை!
- கலை, அறிவியலையும் கண் வைக்கலாம்நமக்குத் தெரியாத எண்ணற்ற படிப்புகளை கலை, அறிவியல் படிப்புகள் வழங்குகின்றன.
- +2 க்கு அடுத்து என்ன?பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு அடுத்து என்ன செய்வது? என்ன செய்ய வேண்டும்?
- ராகுல் எடுத்த பிரம்மாஸ்திரம்சாதிவாரிக்கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் என்ற பிரம்மாஸ்திரத்தை ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார். இந்தியா கூட்டணியின் இப்புதிய வியூகத்தின் பின்புலம் என்ன?
- ஷவர்மா மட்டுமா பிரச்சனை?சுகாதாரமற்ற சூழல், பழைய எண்ணெய், தரமற்ற மூலப்பொருட்கள் என்று பல அம்சங்களும் சேர்ந்து உணவுத்தொழிலையும் நுகர்வோரையும் அச்சுறுத்திவருகின்றன. (Image by Mariya from Pixabay)
- பாலுறவுப் படங்கள் பார்ப்பது குற்றமா?ஒரு தனிமனிதன்,பாலுறவுக்காட்சிகளை தனது செல்பேசியில் தனிமையில் பார்ப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 ஆவது பிரிவு சொல்வதுதான் என்ன? (Image by Saji Mohamed from Pixabay)
- வாடகை சைக்கிள் ஓட்டியிருக்கீங்களா?1990கள்வரை உங்களுக்குப் பள்ளிப் பருவம் இருந்திருந்தால் நிச்சயம் வாடகை சைக்கில் ஓட்டிய பழக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். குரங்குப் பெடல் தொடங்கி, சைக்கிள் சாகசம் வரைக்கும் எல்லாமே வாடகை சைக்கிள்களில்தான் நடக்கும். (Photo courtesy: toodlingstudio)
- விஸ்வகர்மா திட்டத்துக்கு ஏன் எதிர்ப்பு?கிராம்ப்புற் கைவினைஞர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் விஸ்வகர்மா திட்டத்தை ஏன் தி.க. உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன?
- ”அவரு எங்க ஆளுக!”அறிவியல் அறிஞர்முதல் தொழிலதிபர்வரை... வெற்றிபெற்ற மனிதர்களின் சாதியை ஆராயும் அளவுக்கு தமிழன் தரம் தாழ்ந்து போயிருக்கிறானா?
- காலில் விழலாமா?காலில் விழும் கலாச்சாரம் குறித்து திரும்பவும் பேசத்தொடங்கியிருக்கிறோம். ஒரு மனிதன், இன்னொரு மனிதனின் காலில் விழுவது சரிதானா? (Image by freepik)
- அமெரிக்க தொழில் வழிகாட்டி டெல்.கணேசன் நேர்காணல்திருச்சியில் பிறந்து, அமெரிக்காவில் வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்ந்திருப்பவர் திரு.டெல்.கணேசன். ரூ.500 கோடி மதிப்புள்ள கைபா குழுமத்தின் தலைவர். தகவல் தொழில்நுட்பம், திரைப்பட தயாரிப்பு, விநியோகம், துணிகர முதலீடு என்று பல முனைகளிலும் இயங்கிவரும் நிறுவனம் அவருடையது. அவர் அண்மையில் The Pursuit: A manifesto from the American Dream Guru என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதனையொட்டி அவருடன் இணையவழியில் ஒரு நேர்காணல் செய்தேன். அதுவே இது!
- பெண்களை மதியுங்கள்: உச்சநீதிமன்றம்நீதிமன்றம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தீர்ப்புகள், மனுக்களிலும் பெண்களை சட்டப்படியான சொற்களைவைத்துத்தான் விளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியிருக்கிறது. எந்தெந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறது. Image by Gordon Johnson from Pixabay
- பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யுங்க!பங்குச்சந்தையைவிட, ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் துறை. அவற்றில் முதலீடு செய்வதன்மூலம் நீண்டகால அடிப்படையில் கணிசமான லாபம் பார்க்க முடியும். தற்போது நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வளரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (செயற்கை நுண்ணறிவு, மாற்று எரிசக்தி முதலிய…) முதலீடு செய்யும் பரஸ்பர நிதித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். (பரஸ்பர நிதிகளும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவையே. எனவே, நன்கு ஆலோசித்து முடிவெடுங்கள்)
- ஃபகத் ஃபாசில் எடிட்: என்ன ஆச்சு தமிழ்ச்சமூகத்துக்கு?’மாமன்னன்’ திரைப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம், சாதிவெறி கொண்ட அதிகார வெறிபிடித்த பாத்திரம். அந்தக்கூட்டத்தால் நசுக்கப்பட்ட எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு வருவதோடு படம் முடிகிறது. ஆனால், சாதிப் பெருமிதத் தமிழர்கள், தங்கள் சாதிப்பெருமையைப் பாடுவதற்காக, ஃபகத் ஃபாசிலின் காட்சிகளை எடிட் செய்து வீடியோக்களாக வெளியிட்டு மீசை முறுக்குகிறார்கள். இணையத்தில் எதற்காக இவ்வளவு ஜாதிப்பெருமை மீசை மயிர் ஒட்டிக்கொண்டுகிடக்கிறது?
- பங்குச்சந்தை ஒரு மர்மக்குகையா?பங்குச்சந்தை சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை. அது, நம் பணத்தைப் பிடுங்கும் இடம் என அஞ்சி ஓடுவோர் இருக்கிறார்கள். அது, எவருமே புரிந்துகொள்ள முடியாத மந்திரம் என்று மயங்குவோர் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்களுக்கு அது தேவையற்ற தலைவலி என்று ஒதுங்குவோரும் இருக்கிறார்கள். உண்மையில், பங்குச்சந்தை என்பது என்ன?
- நான் ஏன் பிறந்தேன்?ஒரு பிறந்த நாள் என்பது அன்றைக்கு மட்டுமான நாளா? அதற்கு முந்தைய நாட்களை அசைபோடும் நாள் அல்லவா....
- ’கெளரவ டாக்டர்’ பரிதாபங்கள்கெளரவ டாக்டர், சிறந்த சமூக சேவகர், சிறந்த தொழிலதிபர்-ஆகிய பெயர்களில் பட்டம் வழங்குவதையே ஒரு கும்பல் பல ஆண்டுகளாக ஒரு தொழிலாக செய்துவருகிறது. அண்மையில் நடிகர் வடிவேலு, ’பரிதாபங்கள்’ புகழ் கோபி, சுதாகர் ஆகியோர்கூட இதுபோன்ற ஒரு கும்பலிடம் சிக்கி ஏமாந்திருக்கிறார்கள். புகழ், மயக்கம்தான். தவறில்லைதான். ஆனால், அங்கீகாரம் எவரிடமிருந்து வருகிறது என்று விசாரிக்கவாவது வேண்டாமோ? (Image by 愚木混株 Cdd20 from Pixabay)
- டி.என்.பி.எஸ்.சி: தேவை வெளிப்படைத்தன்மைகுரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத்திருத்திக்கொள்ள அவ்வமைப்பு தயாராகவேண்டும். நடந்து முடிந்த மெயின் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நியாயமாகத் தேர்வு எழுதிய தேர்வர்கள் நம்புகிறார்கள்.
- ஒரு வடக்கன் சோக( !) கதா....வட இந்திய தொழிலாளர்கள் ஏன் தமிழகத்தில் குவிகிறார்கள்? இது, தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தைப்பாதிக்குமா? தொழில்துறை என்ன சொல்கிறது? புலம் பெயர் தொழிலாளியின் சட்டப்பூர்வ உரிமைகள் என்னென்ன? (படம்: பிக்ஸாபே)
- வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?வாழ்க்கை எனும் பெருங்கடல், நமக்கு தினமும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அதைப் புரிந்துகொள்கிறோமா? எதையாவது கற்றுக்கொள்கிறோமா?
- கேரளப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாத விலக்கு விடுமுறைபல்கலைக்கழக மாணவியருக்கு மாத விலக்கு விடுமுறை, பேறு கால விடுமுறை ஆகியவற்றை அறிவித்திருக்கிறது கேரளம். இதன் பின்னணியில் முற்போக்கான ஒரு பெண் அமைச்சர் இருக்கிறார்.
- சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி: திரு.ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் நேர்காணல்சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் பபாசி புத்தகக் கண்காட்சி வளாகத்திலேயே பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நாளைமுதல் நடக்க இருக்கிறது. மொத்தம் 3 நாட்கள் நடக்கும் (ஜன.16-19) இந்நிகழ்வில் பன்னாட்டு பதிப்பாளர்களுடன் நம்மவர்கள் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கின்றனர். அக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆழி பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு.ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் ஓர் உரையாடல் இது..
- நூல் பரிந்துரை: தமிழர் திருமணம்-அன்றுமுதல் இன்றுவரை.பாரதி புத்தகாலயம், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ‘தமிழர் திருமணம்-அன்று முதல் இன்றுவரை’ என்ற சிறு நூலை இன்று பரிந்துரைக்கிறேன்.
- நூல் பரிந்துரை: பெத்தவன் (எழுத்தாளர்: இமையம்)சாதி ஆணவக் கொலைகள், காதலிப்பவர்களை மட்டும் குறிவைப்பதில்லை. காதல் கொண்ட இளம் நெஞ்சங்களைப் பெற்ற வயிறுகளையும் தீய்த்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கதையை துள்ளத்துடிக்க நம் கைகளில் போடுகிறார் எழுத்தாளர் இமையம். என்னை அழ வைத்த கதை இது.
- வாசிப்பும் நேசிப்பும்நூல் வாசிப்பு ஏன் முக்கியமானது, அது வாசகனை என்னவெல்லாம் செய்யும்...இன்றைய வாசிப்புப் பழக்கம் எதை நோக்கிச் செல்கிறது?-இவற்றையெல்லாம் எனது நண்பரும் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் சமூக விலக்கல் துறையின் (social exclusion) தலைவருமான பேரா.வெ.பெ.ராமஜெயம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். பச்சையப்பன் கல்லூரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களின் தயாரிப்பு அவர். எனது முன்னாள் இந்தியா டுடே சகாவும்கூட. இது, தொலைபேசி பதிவு என்பதால் ஒலியின் தரம் குறைவானதாகவே இருக்கிறது. பொறுத்தருள வேண்டுகிறே
- கவிதா ராமு, இ.ஆ.ப வாழ்க!புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் பகுதியில் பட்டியலின மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை அழைத்துச்சென்று உடனடியாக ஆலய நுழைவை மேற்கொண்டிருக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப. ஆகிய இருவரும். இதுதான் நீதி! இதற்குத்தான் அதிகாரம்! நீவிர் வாழ்க! (படம்: அவரது முகநூல் பக்கத்திலிருந்து)
- ஐ.சி.ஐ.சி.சி. வங்கியின் முன்னாள் தலைவர் கைதுஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சாரும் அவரது கணவர் தீபக் கோச்சாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்குவதுபோல் கொடுத்து, அவர்களிடமிருந்து தங்கள் நிறுவனத்துக்குப் பணத்தைக் கைமாற்றிக்கொண்ட ‘சாதுர்யத்துக்கு’ கிடைத்திருக்கும் பரிசு இது. அந்தக்கடனை வராக்கடனாக அறிவித்தது இன்னும் பிரமாதம்! காலம், சாந்தா கோச்சாருக்கு தகுந்த பாடத்தைக் கற்பித்திருக்கிறது. (படம்: நன்றி: உலக வர்த்தக அமைப்பு)
- இலக்கியவாதிகளும் இடக்கரடக்கலும்வணிக எழுத்துக்கும், ‘இலக்கிய’ எழுத்துக்கும் சண்டை நடப்பது காலம் காலமாகத்தொடர்கிறது. இவ்விரு உலக ரசிகர் மன்றங்கள் மாறி மாறி மோதிக்கொள்வதும் தொடர்கிறது. இது இப்படியே இருக்கலாமா? எது இலக்கியம்? எது இலக்கியமன்று? நமது அளவுகோல்கள் எப்போது மாறும்? சாதியும் மதமும் ஒரு கட்சி அரசியல் சார்பும் தனிநபர் துதியும் இலக்கியமாகும் சூழலில் எதுதான் இலக்கியம்?
- ’நம்ம ஸ்கூல் Vs நம் பள்ளி’அரசுத்திட்டங்களுக்குப் பெயர் சூட்டும்போது எழுத்துத்தமிழிலும் பிழையற்ற மொழியிலும், பிற மொழிக்கலப்பின்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
- விவசாயிகள் தற்கொலை என்றுதான் நிற்கும்?மத்திய அரசின் தகவலின்படி தினசரி 15 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதனால் இது நேர்கிறது? இதனைத்தடுக்க என்னதான் வழி? (படம்: நன்றி: பிக்ஸாபே)
- மனித உரிமைகள் தினம்சர்வதேச மனித உரிமைகள் தினமான (டிச.10) இன்று, நீதியரசர் டி.கே. பாசு அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதற்குக் காரணம், திரு.டி.கே.பாசு அவர்கள். அவர் மறைந்தாலும் அவரது பங்களிப்பை மனித உரிமை ஆர்வலர்களால் என்றென்றைக்கும் மறக்க முடியாது.
- தமிழுக்கா இந்நிலை!?தமிழ் ஓர் அற்புதமான மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வ்தில் பெருமையடைகிறோம். ஆனால், நம் தாய் மொழியை எந்த அழகில் வைத்திருக்கிறோம்?
- "Getting to Know Gandhi: A biographer's journey "-speech by Ramachandra GuhaEminent historian and think tank Mr.Ramachandra Guha delivered an extraordinary speech in the Bangalore Literary Festival on 3rd Dec 2022. Sorry friends... it was shot by me using my Vivo phone without additional professional equipment. So, beg your pardon pls!
- பெங்களூரு இலக்கியத் திருவிழா பட்டையைக் கிளப்பிவிட்டது.200க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள் வாசகர்களோடு உரையாடும் திருவிழாவை பெங்களூரு இலக்கியத் திருவிழா அழகாக, நேர்த்தியாக செய்துகாட்டியது.
- பாலியல் துன்புறுத்தலும் குழந்தைகளும்...தொழில்நுட்பமும் நாகரீகமும் இவ்வள்வு முன்னேறியும் குழந்தைகளைப் பாலியல் ரீதியில் அணுகுவதும், பாலியல் சந்தையில் அவர்களது அந்தரங்கத்தை விற்பதும் நாட்டில் நடக்கிறது. இதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டாமா? இதுகுறித்து விரிவாக உரையாட வேண்டாமா? (படம்: நன்றி: அலெக்ஸா, பிக்ஸாபே)
- தமிழினிதுதமிழ் மொழியின் சிறப்புகளைச் சொல்ல சொற்கள் போதாது. தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளைச் சொல்ல வாழ்நாள் போதாது. அத்தகைய இலக்கியச் சொத்தின் ஒரு துளி இது: முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. (இலக்கியம்: குறுந்தொகை. இயற்றியவர்: கூடலூர்க்கிழார்)
- 72 வயது இளைஞர்அமெரிக்காவைச்சேர்ந்த 72 வயது பாட்காஸ்டர் எட்கர்லி, 15 ஆண்டுகளாக பாட்காஸ்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். தனக்குப்பிடித்த கிண்ட்ல் மின்னூல் சாதனத்தைப் புகழ்ந்து தள்ளுகிறார். பாடம் நடத்துகிறார். இவரைப்போலவே நாமும் நமது விருப்பங்களை வெளிப்படுத்துகிறோமா? நமது திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கும் தீனி போடுகிறோமா?
- அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு...25% வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.9 ஆயிரம் கோடியை இழந்திருக்கின்றனர் தமிழர்கள்....
- கர்ப்பிணி நாயை 25 பேர் அடித்தே கொன்றிருக்கிறார்கள் தில்லியில்.எப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் வாழ்கிறோம் நாம்!?
- 10% இட ஒதுக்கீடு: தத்துவமும் கணக்குகளும்10% இட ஒதுக்கீட்டை வரவேற்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் வலுவான காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்தால் சுவையான பல தகவல்கள் கிடைக்கும்.
- 10% இட ஒதுக்கீடும் சமூக நீதியும்உயர் சமூகத்தினருக்கான 10% இட ஒதுக்கீடுதான் இன்றைய பேசுபொருள். தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இது, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல் என்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்துக் கொஞ்சம் பேசுவோம்.
- சமயச் சார்பின்மை குறித்து எஸ்.ஆர். பொம்மை (எ) இந்திய அரசு வழக்கு சொல்வது என்ன?ஆளுநர்களின் பணி, நடத்தை விதிகள், அதிகாரம் ஆகியவை இன்றும் பேசுபொருளாகின்றன.